2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எதிர்வரும் வியாழக்கிழமை வெளியாகிறது அப்பிளின் MacBook Pro?

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 21 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிளின் அடுத்த நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், அடுத்த தலைமுறை MacBook Proவினை, அப்பிள் வெளிப்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக, 2012ஆம் ஆண்டே, MacBook Pro-ஐ, குறிப்பிடத்தக்களவு ரீதியில் அப்பிள் இற்றைப்படுத்தியிருந்தது. அதன் பின்னர், Retina திரை மற்றும் Force Touch trackpad ஆகியன மாத்திரமே இற்றைப்படுத்தப்பட்ட நிலையில், பாரிய மாற்றமொன்று, பல காலமாக நிகழவில்லை.

இந்நிலையில், இடம்பெறவுள்ள நிகழ்வில், புதிய iMac desktop, MacBook Air, MacBook Pro மடிக்கணினிகளுடன், தனித்த 5K monitor ஆகியன வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய MacBook Pro ஆனது, ஏற்கெனவே இருந்ததை விட மெல்லியதாக இருப்பதுடன், flatter keyboard மற்றும் “Dynamic Function Row” ஒன்று அல்லது நியமமான function keysகளுக்கு பதிலாக, தொடுதிரை OLED strip ஒன்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, புதிய MacBook Pro-இல், USB Type-C, Thunderbolt 3 portகளை அப்பிள் வைத்திருக்குமெனவும், வழமையான USB portகள், அப்பிளின் MagSafe மின்னேற்றும் இணைப்பு ஆகியன அகற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தனிநபர்க் கணினிச் சந்தையின் வீழ்ச்சியடையும் வரைபை, Mac கணினிகளின் விற்பனைகள், வழமையாகத் தூக்கி நிறுத்துகின்ற போதும், பூகோள ஆராய்ச்சி நிறுவனமான IDC-இன் கருத்துப்படி, Mac கணினிகளும் இவ்வருடம் வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய Mac கணினி வரும் வரைக்கும் பலர் பொறுத்திருக்கின்ற நிலையில், கடந்தாண்டின் இரண்டாவது காலாண்டில், 4.8 மில்லியன் Mac கணினிகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில், 4.4 மில்லியன் Mac கணினிகளே விற்பனை செய்யப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .