2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

VPN Filter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மால்வேரானது, தொடர்புகளை சேகரிக்கவும் பிற கணினிகளைத் தாக்கவும் அது எந்த கருவியைத் தாக்கியுள்ளதோ அந்தக் கருவியை அழிக்கவும் கூடியது.

கணினி பயன்படுத்துவோர் தங்கள் Router களை Reboot செய்யுமாறு FBI அறிவுறுத்தியுள்ளது. இந்த மால்வேர் தாக்குதல் Router இன் Memory இல் தன்னையே அப்லோட் செய்து கொள்கிறது.

Reboot செய்யும்போது Router இன் Memory அழிக்கப்படுவதால் தற்காலிகமாக மால்வேர் தொற்று அகற்றப்படுகிறது.

என்றாலும் முழுவதுமாக இந்த மால்வேரை அகற்ற Routerகளை Factory Settings ரீசெட் செய்வது ஒன்றுதான் வழியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .