2020 ஜூலை 15, புதன்கிழமை

காயத்திரி சித்தரின் 12 ஆவது சமாதி தினம்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

 

காயத்திரி சித்தர் டொக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் 12ஆவது வருட சமாதி தின நிகழ்வுகள், அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ ராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேய கோவிலில், செவ்வாய்க்கிழமை  (22) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 

அன்றையத் தினம், மலேசியாவில் இருந்து வருகைதரும் ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலின் கீழ், மேற்படி கோவிலில்  பல்வேறு நிகழ்வுகள், நடைபெறவுள்ளன.

காயத்திரி சித்தர் டொக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் மானசீக ஆசிர்வாதத்தோடு, ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலின் மூலம், குரு பூஜை, மகாயாகம், அபிசேக அலங்கார பூஜை என்பன நடைபெறவுள்ளதுடன், அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

நடைபெறவுள்ள அனைத்து வழிபாடுகள், பூஜைகளிலும் அனைவரும் கலந்துகொண்டு சற்குருதேவரின் திருவருளையும் ஆஞ்சநேயப்பெருமானின் அருட்கடாட்சத்தையும் பெறுமாறு, கோவில் நிர்வாகத்தின் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது சான்றோர் வாக்கு. அந்த அளவுக்கு, கோவில்களின் முக்கியத்துவம் உணரப்பட்ட மதமாக,  இந்துமதம் அமைந்துள்ளது.

இந்து மதத்தின் சிறப்புக்கும் உயர்வுக்கும் அடிப்படையாக அமைவது கோவில்கள். ஆன்மாக்கள் இறைவனோடு லயிக்கின்ற இடமும் அந்த இறைவன் உறைந்திருக்கின்ற இடமும் கோவில். அத்தகைய கோவில்கள் அமையப்பெறுவதென்பது, சாதாரண விடயமல்ல. அவ்வாறு அமையப் பெற்றதில் ஒன்றே,  அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்.

இலங்கையில் பல ஆஞ்சநேயர் கோவில்கள் இருந்தாலும் ஐந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் கற்சிலை அமைந்துள்ள கோவில், இது ஒன்றே என்பதே இங்கு சிறப்பு.

இக்கோவிலை அமைப்பதில் கால்கோலாகச் செயற்பட்டவர் அமரர் நல்லதம்பி கந்தசாமி என்பதுடன், தற்போது கோவிலை பாரமரித்து பூஜை வழிபாடுகளை செய்து வருபவரும் நல்லதம்பி கந்தசாமி என்பது, இறையருளுடன் கூடிய இன்னுமொரு அதிசயம்.

காயத்திரி சித்தர் சுவாமிகளின் ஆசிர்வாதத்தால் இயங்குகின்ற கோவில்களில், எவ்வாறு நிருவாகக் கட்டமைப்பு இல்லையோ அது இங்கும் இல்லை. பரிபாலிப்பதற்காக மட்டும் பரிபாலன சபை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிசயம் மிக்கதும் தன்னை நாடிவரும் அடியார்களின் வினைபோக்கி நல்லருள் புரிபவருமான பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், காயத்திரி சித்தர் டொக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் 12 ஆவது வருட சமாதி தினம் 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

அன்றைய தினம் இடம்பெறுகின்ற பூஜைகள் யாவற்றையும் கிரியா கலாநிதி சிவஸ்ரீ கணேசலோகநாதக் குருக்கள், கோவில் குரு சிவஸ்ரீ த.குகனேசசர்மா ஆகியோர் நடத்தி வைக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X