2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

சித்திவிநாயகர் எண்ணெய்க்காப்பு

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, அரசடிச்சந்தி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகளுக்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு, இன்று (29) இடம்பெற்றது.

காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, திருமுறை பாராயணம், புண்ணியாக வாசனம், எண்ணெய்க்காப்பு சார்த்துதல், யாக பூஜை, திரவிய ஹோமம், தீபாராதளை மற்றும் நாத கீதாஞ்சலி என்பன இடம்பெற்றன.

ஆலய பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ த. சிவகுமாரன் குருக்கள் தலைமையில், கல்லடி காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ த் சாம்பசிவம் சிவாச்சாரியார் உள்ளிட்ட குருமார்களின் பங்களிப்புடன் கிரியைகள் இடம்பெற்றன.

ஸ்தூபி அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் என்பன நாளை (30) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--