2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜனவரி 14

Editorial   / 2018 ஜனவரி 14 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

1539: கியூபாவை ஸ்பெய்ன் தனது ஆட்சியில் இணைத்துக்கொண்டது.

1724: ஸ்பெய்ன் மன்னர் 5 ஆம் பிலிப் முடிதுறந்தார்.

1761: இநதியாவில் ஆப்கானிஸ்தானியர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான 3 ஆம் பானிபாட் சமர் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானியர்கள் பெற்ற வெற்றி இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது.

1858: பிரான்ஸில் 3 ஆம் நெப்போலியன் கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.

1907: ஜமைக்காவில் ஏற்பட்ட பூகம்பத்தர் 1000 இற்கும் அதிகமானோர் பலி.

1933: அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டக்ளஸ் ஜார்டின் எதிரணி வீரர்களின் உடலை இலக்கு வைத்து பந்துவீசும் உத்தியை கையாண்டார். ஒரு பந்து அவுஸ்திரேலியஅணித்தலைவர் பில் வூட்புல்லின் இதயத்தை தாக்கியது. இத் தொடர் பொடிலைன் சீரிஸ் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1943: பிராங்ளின் டி ரூஸ்வெல்ட், விமானத்தில் பறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார். ஆவர் மியாமியிலிருந்து மொராக்கோவுக்குப் பயணம் செய்தார்.

1950: மிக்-17 விமானம் கன்னிப் பறப்பை மேற்கொண்டது.

1998: ஆப்கானிஸ்தான் சரக்கு விமானம் பாகிஸ்தான் மலையொன்றில் மோதி சிதறியதால் 50 இற்கும் அதிகமானோர் பலி.

2000: பொஸ்னியாவில் 100 முஸ்லிம்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான 5 பேருககு ஐ.நா. விசாரணைக்குழு 25 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை வழங்கியது.

2005: சனியின் சந்திரன்களில் ஒன்றான டைட்டானில் ஹியூஜின்ஸ் விண்கலம் தரையிறங்கியது.

2011: டியூனிஷிய ஜனாதிபதி பென் அலி மக்களின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாட்டைவிட்டு  தப்பிச் சென்றார்.

2011: சபரிமலையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 104 பக்தர்கள் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .