2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் இன்று; பெப்ரவரி 21

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

1437   இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

1440  புருசியக் கூட்டமைப்பு உருவானது.

1543   எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.

1613   முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது. 

1803   கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர். 

1804   நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.  

1808  உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது. 

1842  தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.  

1848   கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.

1878   முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.

(படம்;  இணையம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .