2020 மே 25, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 19

Editorial   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1903 : மல்தோவாவின் கிசினியோவ் நகரில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பாலஸ்தீனத்திலும், மேற்குலகிலும் அகதிகளாகக் குடியேறினர்.

1936 : பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கியது.

1943 : எல்பர்ட் ஹாப்மன் தனக்குத் தானே எல்.எஸ்.டி எனும் போதை மருந்தை முதற்றடவையாக ஏற்றிக் கொண்டார்.

1954 : உருது மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971 : சியேரா லியோனி குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1971 : முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975 : இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

1984 : நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும் என்ற பண் ஆஸ்திரேலியாவின் நாட்டுப்பண்ணாகவும், பச்சை, பொன் நிறங்கள் தேசிய நிறங்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1988 : இந்திய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக மட்டக்களப்பில் 30 நாள்கள் உண்ணா நோன்பிருந்த அன்னை பூபதி இறந்தார்.

1989 : அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில், 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1993 : ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாள்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்.பி.ஐ இன் முற்றுகை கட்டடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் மற்றும் 18 சிறுவர்கள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர்.

1995 : அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில், 19 சிறுவர்கள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டனர்.

1995 : சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக, விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

1999 : ஜேர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

2006 : நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2011 : பிடல் காஸ்ட்ரோ கியூபா பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X