S. Shivany / 2021 ஜனவரி 17 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
1595 – பிரான்சின் நான்காம் என்றி எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.
1608 – எத்தியோப்பியப் பேரரசர் முதலாம் சுசேனியோசு தலைமையிலான இராணுவம், ஒரோமோ படைகளைத் தோற்கடித்து 12,000 பேரைக் கொன்றது.
1648 – இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்லசுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
1773 – கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்தார்.
1811 – மெக்சிக்கோ விடுதலைப் போர்: எசுப்பானியாவின் சுமார் 6,000 படை வீரர்கள் 100,000 மெக்சிக்கோ புரட்சியாளர்களைத் தோற்கடித்தனர்.
1819 – சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
1852 – ஐக்கிய இராச்சியம் வால் ஆற்றுக்கு வடக்கே பூர்களை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தை தென்னாபிரிக்கக் குடியரசுடன் செய்து கொண்டது.
1893 – அவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லில்லியுகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
1899 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
1912 – பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் இராபர்ட் பால்க்கன் இசுக்காட் தென் துருவத்தை அடைந்தார்.
1915 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியத் துருக்கியை சரிக்காமிசு போரில் வென்றது.
1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா கூ25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
1920 – ஐக்கிய அமெரிக்காவில் மதுசாரத் தடை அமுலுக்கு வந்தது.
1928 – லியோன் ட்ரொட்ஸ்கி மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின.
1945 – சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாட்சிகள் வெளியேற ஆரம்பித்தனர்.
1946 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை முதலாவது கூட்டத்தை நடத்தியது.
1948 – தென்கிழக்கு ஆசியாவில் தனது குடியேற்றத்தை மீண்டும் ஆரம்பிக்க முயன்ற நெதர்லாந்துக்கும், இந்தோனேசியாவுக்கும் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது.
1951 – சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
1961 – கொங்கோ ஜனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைதுசெய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981 – பிலிப்பீன்சில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கோஸ் நீக்கினார்.
1991 – நோர்வே மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார்.
1991 – வளைகுடாப் போர் ஆரம்பமானது.
1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக ஜப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.
1994 – லாஸ் ஏஞ்சலசில் 6ஃ7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.
1995 – ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் உயிரிழந்தனர்.
1998 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
2002 – காங்கோவில் நைராகொங்கோ எரிமலை வெடித்ததில் 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
2007 – வட கொரியா அணுவாயுதச் சோதனை நடத்தியதை அடுத்து ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது.
2010 – நைஜீரியாவில் முசுலிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
18 minute ago
27 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
31 minute ago
35 minute ago