Editorial / 2019 ஜூன் 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1902 : ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
1914 : உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர்.
1934 : பல்கேரியாவில் அரசியற்கட்சிகள் தடை செய்யப்பட்டன.
1935 : பொலிவியாவுக்கும் பராகுவேயுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
1940 : இரண்டாம் உலகப் போர் – 13,000 பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் நாட்சி ஜேர்மனியின் இராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர்.
1942 : ஆன் பிராங்க் தனது 13ஆவது அகவையில் ஒரு நாட்குறிப்பைப் பெற்றார்.
1943 : பெரும் இன அழிப்பு - ஜேர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.
1944 : இரண்டாம் உலகப் போர் - ஓவர்லார்ட் நடவடிக்கை - அமெரிக்க வான்குடைப் பதாதிகள் பிரான்சின் கேரன்டான் நகரைக் கைப்பற்றினர்.
1954 : தனது 14ஆவது அகவையில் இறந்த தோமினிக் சாவியோவை திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு புனிதராக அறிவித்தார்.
1964 : இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
1967 : கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1967 : சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1987 : மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது..
1990 : ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
1991 : ரஷ்யாவில் முதற்றடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார்.
1991 : கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1993 : நைஜீரியாவில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.
1999 : நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.
2003 : 'தமிழர் விடுதலை இயக்கம்' என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
2006 : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.
2016 : அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் ஓரினச் சேர்க்கையாளரின் இரவுக் கூடலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர்.
2017 : வட கொரியாவில் 17 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் ஆழ்மயக்கத்தில் நாடு திரும்பிய அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025