S. Shivany / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
1690 – யாழ்ப்பாணத்தில் கிறிஸ்மஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.
1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
1814 – பிரித்தானியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.
1846 – பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.
1851 – அமெரிக்கக் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
1865 – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.
1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
1913 – மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.
1914 – முதலாம் உலகப் போர்: கிறிஸ்மஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1924 – அல்பேனியா குடியரசாகியது.
1939 – இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறிஸ்மஸ் நாள் அமைதிகாக்கக் கோரிக்கை விடுத்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.
1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.
1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
1969 – வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1974 – ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.
1994 – ஏர் பிரான்ஸ் விமானம் 8969 அல்ஜியர்சில் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.
2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005 – டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.
2008 – உகண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ ஜனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
20 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
28 minute ago