2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 27

Editorial   / 2017 ஒக்டோபர் 27 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

1275: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரம் உருவாக்கப்பட்டது.

1806: பிரெஞ்சு இராணுவம் ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நுழைந்தது.

1904 நியூயோர்க் பாதாள ரயில் சேவை சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1922: தென்னாபிரிக்க ஒன்றியத்துடன் இணையும் திட்டத்தை ரொடீஸியா வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிராகரித்தது.

1936: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் 8 ஆம் எட்வர்ட் இளவரசரை மணப்பதற்காக திருமதி வல்லிஸ் சிம்ஸன் தனது கணவரை விவகாரத்துக்கு செய்வதற்கு விண்ணப்பித்தார்.

1958: பாகிஸ்தானின் முதலாவது ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்ஸா, ஜெனரல் அயூப்கான் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது பாகிஸ்தானின் முதலாவது இராணுவப் புரட்சியாகும்.

1961: மௌரிட்டானியா, மொங்கோலியா ஐ.நா.வில் இணைந்தன, நாசா தனது முதலாவது சட்டர்ன் விண்கலத்தை விண் ணுக்கு ​ஏவிய தினம்.

1971: கொங்கோ ஜனநாயக குடியரசின் பெயர் ஸயர் என மாற்றப்பட்டது. (1997 இல் அந்நாட்டிற்கு மீண்டும் கொங்கோ எனப் பெயரிடப்பட்டது).

1991: சோவியத் யூனியனிடமிருந்து துருக்மேனிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

1999: ஆர்மேனிய நாடாளுமன்றத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தி, பிரதமர் வஸ்ஜென் சார்ஜிஸ்யான் உட்பட 6 பேரை கொன்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .