2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 22

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1910 : ஜப்பான் -கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில், கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

1911 : பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1932 : தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

1941 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனி படைகள் ரஷ்யாவில் லெனின்கிராட் முற்றுகையை ஆரம்பித்தன.

1942 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்ருமனி, ஜப்பான், இத்தாலி மீது பிரேஸில் போர் தொடுத்தது.

1944 : இரண்டாம் உலகப் போர் - கிரீட்டில் ஜேர்மானியப் படைகள் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை ஆரம்பித்தன.

1949 : கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.

1953 : பிரெஞ்சு கயானாவில் அமைக்கப்பட்டிருந்த டெவில்சு தீவு என்ற குற்றவாளிகளின் குடியேற்றத் தீவு நிரந்தரமாக மூடப்பட்டது.

1962 : பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1968 : திருத்தந்தை ஆறாம் பவுல் கொலம்பியா, பொகோட்டா நகரை வந்தடைந்தார். இலத்தீன் அமெரிக்காவுக்கு திருத்தந்தை ஒருவர் பயணம் செய்தமை இதுவே முடல் தடவையாகும்.

1972 : ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1978 : சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.

1985 : பிரித்தானியாவின் ஏர்டூர்சு விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அதன் இயந்திரம் தீப்பிடித்ததில், 55 பேர் உயிரிழந்தனர்.

1989 : நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட்டது.

1991 : சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.

2004 : நோர்வே, ஒசுலோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து எட்வர்ட் மண்ச்சின் அலறல், மடோன்னா ஆகிய ஓவியங்கள் துப்பாக்கி முனையில் திருடப்பட்டன.

2006 : கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லையில் புல்கோவோ விமானம் வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 170 பேரும் உயிரிழந்தனர்.

2006 : கிரிகோரி பெரல்மான் புவங்காரே அனுமானத்திற்கான நிறுவல்களைக் கண்டுபிடித்தமைக்காக, அவருக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும், அவர் அப்பதக்கத்தைப் பெற மறுத்து விட்டார்.

2012 : கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .