DEVELOPING STORY

அமைச்சு வேண்டாமென மூவர் தீர்மானம்

புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தாம் எத்தகைய அமைச்சுக்களையும் பொறுப்பேற்கப்போவதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரிசாத் பதியுதீன்,மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தீர்மானித்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றம் நாளை (19) பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்றைய நிகழ்ச்சி நிரலுக்கமைய, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, இந்திக்க பண்டாரநாயக்க, லக்ஷமன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்சா ​ஆகியோர் இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது ஆளும் தரப்புக்கு தாவினர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை மீது, சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றம் நாளை பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்கவில்லை. ஜனாதிபதியாக மட்டுமே பதவி வகித்தார் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, மஹிந்த ராஜபக்ஷவை ஒப்பிட்டு உரத்த குரலில்  சுட்டிக்காட்டினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றத்துக்கு 6 கட்சிகளிலிருந்து எம்.பிக்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பல கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட்டது. எனவே, இந் நாடாளுமன்றம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுடையதென, நாடாளுன்ற உறுப்பினர்  சுசில் பிரேமஜயந் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்சி என்றார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய எதிர்க்கட்சித் தலைவராக  சபாநாயர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் அதிக ஆசனத்தை கொண்டுள்ள கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கியுள்ளதாக, சபாநாயகர்  குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் கூடிய போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரைக் காலம் எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றிவந்த இரா.சம்பந்தன் அப் பதவியை இழந்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய  தேசிய முன்னணியினர் சபையில் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு கடும் எதிர்ப்பை வெ ளியிட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இக் கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

“நாடாளுமன்றத் தேர்தல் வந்தால், மூன்றிலிரண்டுப் பெரும்பான்மையை தாருங்கள். அப்போதே எங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும். தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம். எங்களது சட்டத்தரணிகள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அக்கட்சிக்கு, ஐ.தே.க செயற்குழுவில் அங்கிகாரத்தைப் பெறவுள்ளோம்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், கொழும்பு - காலி முகத்திடலில், இன்று (17) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர், “நெருப்புக்கு மத்தியில் இருப்பது தாச்சி... அப்பம் அல்ல... நெருப்புக்கு முகம் கொடுப்பது தாச்சி தான். எங்களுக்கு பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் தான் எங்கள் பலம். சிறுபான்மை அரசைக் கொண்டிருந்த ஹிட்லர், அன்று உலகப் போர் முடியாவிட்டால்  பொதுத் தேர்தல் தான் வேண்டும் என்றிருப்பார் . ஜனநாயகம் இங்கு மிளகாய்த் தூள் ஆனது. நாங்கள் சிக்ஸர் அடித்தோம். உயர் நீதிமன்றமும் சிக்ஸர் அடித்தது. இப்போது தேர்தலை கேட்கின்றனர். நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால், ஒரு யோசனையை கொண்டு வந்திருக்கலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை. அரசமைப்பை மீறி, அரசமைப்பை பாதுகாக்க முடியாது” ” என்றுக் கூறினார்.

“இப்போது இனவாதம் பேசுகின்றனர். நாட்டைப் பிரிப்பதாக இருபது வருடமாக கூறுகின்றனர். நாங்கள் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும், ஒற்றையாட்சியின் கீழ் தான் ஏற்படுத்துவோம். நீதிமன்றச சுயாதீனம் ஏற்படுத்தியதால் தான், இன்று எல்லோருக்கும் நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை வந்தது. எங்கள் மீது குறை இருந்தால் சொல்லுங்கள்” என்று, பிரதமர் மேலும் கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்க, இன்று (16) முற்பகல் 11.16க்கு இருந்த சுபமுகூர்த்த வேளையில், நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில், இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்க, பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் 5ஆவது முறை இதுவாகும்.

இந்நிகழ்வில், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், மங்கள சமரவீர, கபீர் ஹஸீம், பி.திகாம்பரம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தப் பதவியேற்பை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், அலரி மாளிகையில் இன்று, விசேட அறிவிப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ நீடிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையுத்தரவை நீடித்து, உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்தது.

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழு, இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு மஹிந்த குழுவினர் விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்தனர்.

அத்துடன், மஹிந்த தரப்பினர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்த நீதியரசர்கள் குழு, எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக, விசாரணைக்குத் திகதி குறித்தது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால், 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனு, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சார்பில், அவரது சட்டத்தணிகளால் நேற்று (13) தாக்கல் செய்யப்பட்டிருந்த  நகர்த்தல் மனு, உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி  செய்யப்பட்டது.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்தது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கமைய, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானதென, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு மாலை 4 மணிக்கு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும். நீதியரசர்கள் உரிய நேரத்துக்கு வருகைத்தராத காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வௌியாகவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில்  கூடுதலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தீர்ப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் பலரும் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்துள்ளனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தலொன்றை நடத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்று (13) மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், கடந்த வௌ்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட​தான வர்த்தமானி அறிவித்தலுக்கு, ஏற்கெனவே இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்பிக்கை பிரேரணை மீதான வாக்களிப்பில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக பெரும்பான்மை உள்ளமை நிரூபிக்கப்பட்டதற்கமைய, ரணில் தனதுரையை நிகழ்த்தியதையடுத்து, ச​பையை எதிர்வரும் 18 ஆம் திகதி  பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. இதற்கமைய,117 வாக்குகள் கொண்ட பெரும்பான்மையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு எதிராக எவரும் வாக்களிக்கவில்லை என்பதுடன் ஜே.வி.வி வாக்களிப்பில் கலந்துகொள்ளதாக அதேவேளை கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. குறித்த வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையக்கமைய மேற்கொள்ளப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் இன்று சபையில் நம்பிக்கைப் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, எத்தகையை நிலைப்பாட்டை ஜே.வி.பி கொண்டிருந்ததோ அதே நிலைப்பாட்டையே தற்​போதும் கொண்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் எதிர்காலம் நாடாளுமன்றத்திடமே உள்ளது.  நாடாளுமன்றம் குறித்து மக்கள் தற்போது நம்பிக்கை இழந்துள்ளனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்​மை இருப்பதாக, சஜித் பிரேமதாச சபையில் சமர்பித்த பிரேரணையை, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆமோதித்தார். இதனையடுத்து உரையாற்றிய அவர், 

 1948 ஆம் ஆண்டிலிருந்து எமது நாடு பல்வேறு அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. எமது நாட்டுத் தலைவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 1962 இல் ஏற்பட்ட இராணுவ சதிமுயற்சி, அதன் பின்னரான தெற்கில் பூதாகரமாகிய இளைஞர்கள் புரட்சி அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட யுத்தம் இவை எல்லாவற்றையும் விட பெரிய சதியானது, கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்டது. ஒக்டொபர் 26 ஆம் திகதி இலங்கையில் கறுப்பு வௌ்ளியாக பெயரிடப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமான பிரதமரும், சட்டப்பூர்வமான அமைச்சரவையும் நீக்கப்பட்டமையானது, நாட்டில் இதுவே முதல் தடவையாகும். இதன் காரணமாக நாடு இன்று அழிவின் விழிம்பில் உள்ளது என்றார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை காணப்படுவதனால் அவரையே பிரதமராக நியமிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சஜத்  பிரேமதாச தெரிவித்தார்.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வகையில் அமைந்த, நம்பிக்கைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தும் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடையும் வழங்கப்படாதுள்ளது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென இவற்றை வேடிக்கை பார்க்காது, ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை  நாட்டில் மீண்டும்  ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையிலான, நம்பிக்கைப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்று முன்னர் ஆரம்பமானவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை   உள்ளதென்பது குறித்த பிரேரணையொன்றை சமர்பித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிகம் நம்பிக்கையுள்ளதெனக் குறிப்பிடப்படும் நம்பிக்கைப் பிரேரணை யோசனையொன்று இன்று நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், லக்ஸ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பதியூதின் ஆகியோரால் இந்த யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர்.

அத்துடன் அரசமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றம் பிரேரிக்கும் மற்றுமொரு பிரேரணையும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் இன்று காலை 11.30 மணியளவில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்றைய தினத்தில் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய யோசனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இன்று நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் கலரிகள் மற்றும் விசேட பிரமுகர்களுக்கான சபாநாயகர் கலரிகள் என்பன மூடப்பட்டிருக்கும் என்பதுடன் ஊடகவியலாளர்களுக்கான கலரிகள் மாத்திரமே திறக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, தற்காலிகமாக இடைநிறுத்தி, உயர்நீதிமன்றத்தினால், இன்று (07) வரையிலும், கடந்த 13 ஆம் திகதியன்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நாளை (08) வரையிலும் நீடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்று நாள்கள் இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே, இந்த தடையுத்தரவை, ஏழு நீதியசர்கள் கொண்ட குழாம், நேற்று(06) மாலை நீடித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கமை, நாடாளுமன்றம் நவம்பர் மாம் 9ஆம் திகதி இரவு கலைக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதியின் அந்தத் தீர்மானத்துக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் 13உம், அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 5 அடிப்படை உரிமை மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய குழாம், ஜனாதிபதியின் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, டிசெம்பர் மாதம் 07ஆம் திகதி வரையிலும் (இன்று வரையிலும் ) தற்காலிகமாக இடைநிறுத்தி, கடந்த 13 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு முழு நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு அன்றிருந்த அரசாங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நளீன் பெரேரா, நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் நவம்பர் 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டே ஏழு நீதியசர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், பிரதம நீதியரசர் நளீன் பெரேரா, தனது தலைமையில் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனெக்க அலுவிஹாரே, விஜித் மலல்கொட, சிசிர டி அஃப்ரூ மற்றும் முதுரூ பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்களை நவம்பர் 26 ஆம் திகதி நியமித்தார்.

இதேவேளை, மேற்படி மனுக்களை ஏற்கெனவே பரிசீலனைக்கு எடுத்துகொண்ட மூன்று நீதியரசர்கள் குழாம், அறிவித்திருந்ததன் பிரகாரம், டிசெம்பர் 4 ஆம் திகதி தொடக்கம் நேற்று (06) வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, ஏழு நீதியசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், பல சிவில் அமைப்புகள் உள்ளடங்களாக, 13 ​அடிப்படை உரிமை மனுக்கள், கடந்த 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, வர்த்தமானிக்கு ஆதரவாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. ​தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன, அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் 5 மனுக்களை கடந்த 13ஆம் திகதியன்று தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுக்கள் மீதான விசாரணையின் போது, கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்த விவகாரத்தை கையாள முடியாது.

அதன் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கிலிருந்து நீதிமன்றம் வெளி​யேறவேண்டும் எனக் கோரியிருந்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (05)  மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும், பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் என்றும் ஐ.தே.க போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சத்தியம் வழங்கிவிட்டு, அந்தச் சத்தியத்தை நிறைவேற்றாமல் செயற்படுகின்றாரெனக் கூறியுள்ளார்.

தன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் ஜனாதிபதி கூறுவதாகவும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது, பாமர மக்களுக்குக்கூடத் தெரியுமென்றும் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, தன்னை விமர்சிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். .

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டாரென்றும் அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இறுதியில் ஜனநாயகமே வெல்லுமென்றும் சர்வாதிகாரம் பொசுங்கிப் போகுமென்றும் சூளுரைத்ததோடு, ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதியென்றும் கூறியுள்ளார்.

தாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாகவும் நாட்டை முன்னேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சால்ஸ் நிர்மலநாதன் எம்.பி

ஜனாதிபதி எடுக்கின்ற தீர்மானங்களினாலேயே நாட்டில் இவ்வாறான நிலை  ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியே இது ஆரம்பமானது. இவ்வாறான நிலையில் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

அரசாங்கம் அமைக்க சதித்திட்டம் தீட்டுவோரின் ஒரு செயற்பாடே, மட்டகளப்பில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்த சதித்திட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய தினமே இடம்பெற்றது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்தேன்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். இது தவறாகும். மாவீரர் தினத்தை அனுஸ்டித்த பெற்றோருக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இருவரை கைது செய்தனர் என்றார்.  

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோன் அமரதுங்க எம்.பி

அரசமைப்பின்படி பிரதமர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில், அடுத்த அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு. மாலை 5 மணிக்கு முன்னர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

எதிர்வரும் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தை சுற்றிளைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அன்று சபாநாயகரை சபைக்குள் வரவிடாது குழப்பம் விளைவித்தவர்கள் இதனையும் செய்வார்கள்.

நாம் நீதிமன்றத்தை பாதுகாக்க வேண்டும்.பொலிஸாரும், இராணுவத்தினரும் இதற்கு இடமளிக்கக்கூடாது. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க  சபையில் தெரிவித்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய  அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து, சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

குறித்த விவாதம் இன்று மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டு வருகிறார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கு, நிதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை கடைபிடிக்காது செயற்பட்டு வருகிறார் எனவும் குறிப்பிட்ட அவர், இரண்டு, மூன்று தடவைகள் கூறியும் அதனை கவனத்தில் எடுக்காது தன்னிச்சையாக செயற்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விஜித ஹெரத் எம்.பி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல்வாதிகளுக்கும், நீதிமன்றில் பிணையில் விடுதலையானவர்களுக்குமே அமைச்சுப் பதவிகளையும், தலைவர் பதவிகளையும் வழங்கினார் என, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் இன்று (05), உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் அன்று சபாநாயகர் ஆசனத்தை சுற்றிவளைத்து, மிளகாய் தூள் தாக்குதல் நடத்தினர் என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நளின்த ஜயதிஸ்ஸ எம்.பி

ஜனாதிபதி அரசமைப்புக்கு அமைய நடந்துக்கொள்வாராயின், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியை தீர்க்கலாம்.

​அரசமைப்பை ஒருபுறம் வைத்துவிட்டு செயல்படும் ஜனாதிபதியினால், உலக நாடுகளில் இலங்கைக்கு இருந்த வரவேற்று இல்லாது போயுள்ளது.

சிலருக்கு மஹிந்த ராஜபக்ஷவே இன்னும் நாட்டின் பிரதமர். சதித்திட்டத்தின் பக்கம் இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அநுரகுமார திஸாநாயக்க எம்.பி

நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதம் ஒன்று நடத்தப்படவிருந்தது. அதனை வாபஸ் பெற்றனர். அடுத்து செய்ய வேண்டியது நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாகும். தற்போது நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இடமளியாது ஒரு சிலர் எழுந்து பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதற்கு இடமளியாதீர்கள் என, சபாநாயகரை கேட்டுக்கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாய

Views ({{hitsCtrl.values.hits}}) | Comments (0)
அமைச்சு வேண்டாமென மூவர் தீர்மானம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.