J.A. George / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடர்ந்து நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட அவசியமில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சிறப்பு அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று(10) வெளியிடுவார் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கள் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுப்பப்படுகிறார்கள்
அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் பி.சி.ஆர் சோதனைகளில் தொற்று உறுதியாகாவிட்டால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். தொற்று உறுதியானால் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் .
அத்துடன், தொற்று உறுதியாகாதவர்களை இனி தமது வீடுகளில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
26 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago