2021 மார்ச் 03, புதன்கிழமை

தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிக்க நடவடிக்கை

J.A. George   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிப்பதற்கு PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை விரைவுபடுத்தியுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தொடர்மாடி குடியிருப்புகளில் இதுவரை PCR அல்லது அன்டிஜன் சோதனைகளை மேற்கொள்ளாதவர்களுக்கு விரைவாக அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

சுமார் 14 தொடர்மாடி குடியிருப்புகள் 06 வாரங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .