2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்ச்சைக்குரிய டிக்கிரி யானை இறந்தது

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த டிக்கிரி யானை நேற்று (24) இறந்துள்ளது.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளது.

வயது முதிர்ந்த நிலையில், குறித்த யானை பௌத்த உற்சவத்தில் பங்கேற்றதால் கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் பாரிய சர்ச்சை தோன்றியிருந்தது.

டிக்கிரி என்றழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு சுமார் 79 வயது என கூறப்படுகிறது.

மிகவும் வயதான நிலையில் காணப்படும் இந்த யானை தொடர்பில் தாய்லாந்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த மாதம் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

 2018ஆம் ஆண்டு உற்சவத்தின் பின்னர் டிக்கிரி யானை சுகவீனமுற்றதாகவும், அதனை குணப்படுத்தும் வகையில் விஷ்ணுவுக்கு நேர்த்திக் கடன் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .