தனக்குத்தானே தீமூட்டி 5 நிமிடங்களையும் 41 செக்கன்களையும் வெற்றிகரமாக நபர் ஒருவர் நிறைவுசெய்துள்ளார். "> Tamilmirror Online || தனக்குத்தானே தீமூட்டி புதிய சாதனை

2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

தனக்குத்தானே தீமூட்டி புதிய சாதனை

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்குத்தானே தீமூட்டி 5 நிமிடங்களையும் 41 செக்கன்களையும் வெற்றிகரமாக நபர் ஒருவர் நிறைவுசெய்துள்ளார்.

இது கின்னஸ் உலக சாதனையாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோர்ஜ் குலொனி என்ற 33 வயதுடைய நபரே இத்தகைய துனீகரமான சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் இச்சாதனையானது அவுஸ்திரேலியாவின் ஆல்ஸ்பார்க் நகரில் புரியப்பட்டுள்ளது.

இவ்வாறான தீமூட்டல் சாதனையை புரிந்து ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை இவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, The Monuments Men’  என்ற திரைப்படத்தில் விசேட ஆடையணிந்து இத்தகைய தீமூட்டல் காட்சிகளில் இவர் ஏலவே நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .