உலகிலே மிகப்பெரிய தலையணைச் சண்டை கடந்தவாரம் அமெரிக்காவில் நிகழ்த்த... "> Tamilmirror Online || மிகப்பெரிய தலையணைச் சண்டை

2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

மிகப்பெரிய தலையணைச் சண்டை

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகிலே மிகப்பெரிய தலையணைச் சண்டை கடந்தவாரம் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுமார், 4,200 பேர் இணைந்து இச்சாதனையை நிகழத்தியுள்ளனர்.

அமெரிக்கா, கலிபோர்னியாவில் அமைந்துள்ள இர்வின் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்தே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

60 செக்கன்கள் தலையணை சண்டை நீடிக்க வேண்டுமென்பதே இச்சாதனையின் நிபந்தனையாக விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்குப்பற்றியவர்களின் தொகையை கணக்கிடுவதற்கு 100 தொண்டர்கள் தேவைப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சாதனையில் பங்குபற்றியவர்களுக்கு 4200 தலையணைகளும் 5,000 டீசேர்ட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிக்காகோ நகரில் 3,183 பேர் பங்குபற்றி நிகழத்தியிருந்த சாதனையை இச்சாதனை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .