2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

410 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத் 

நாளாந்தக் கூலித் தாழிலை மாத்திரமே நம்பி வாழும் அக்கரைப்பற்று அளிகம்பை தேவர் கிராமத்தில் வசித்து வரும் சுமார் 410 குடும்பங்களுக்கு, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில்  உலருணவுப் பொதிகளும் முகக் கவசங்களும், நேற்று மாலை(02) வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்நாயக்க தலைமையில்,  மேற்படி நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது 410 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1850; பேர்  நன்மையடைந்தனர்.
இக்கிராமத்தில் உள்ள 410 குடும்பங்களில், 59 குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தொகையான பெண்களும் சிறுவர்களளும் வயோதிபர்களும் கொண்ட இக்கிராமத்தில், சுமார்  விஷேட தேவையுடையவர்;கள் ஒன்பது பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இம்மக்களின் நன்மை கருதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு செயற்பட்டு உதவியமை வரவேற்கக் கூடியதுதெனவும் இதற்கென இம்மக்களின் ஆசியும் நன்றியும் என்றும் அவர்களுக்கு உரித்தகாட்டும் என்றும் அளிக்கம்பை தேவர் கிராமத்தின் புனித செவேரியர் ஆலயத்தின் பங்குத்தந்தை ஏ.சுசைநாயகம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபள்யு.எம்.எஸ்.ஜீ.விஜயதுங்க, சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .