2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஷ்ரப் நகர் பிரதான வீதியினூடாக கனரக வாகனங்கள் செல்வதற்குத் தடை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில், அஷ்ரப் நகர் பிரதான வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதென, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், இன்று (15) தெரிவித்தார்.

அஷ்ரப் நகர் பிரதான வீதியினூடாக நாளாந்தம் 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், கிறவல் ஏற்றிக் கொண்டு பாரத்துடன் செல்வதால், இவ்வீதி மிகவும் மோசமாகப் பழுதடைந்துள்ளதுடன், பொதுமக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பழுதடைந்த குறித்த வீதியைச் செப்பனிடுமாறும், கனரக வாகனங்கள் செல்வதை நிறுத்துமாறும் கோரி, அண்மைக்காலமாக பொதுமக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒலுவில், பள்ளக்காட்டுப் பகுதியில் கிறவல் மண் அகழ்ந்து இவ்வீதியில் அதிகமான கனரக வாகனங்கள் பாரத்துடன் மிக வேகமாகச் செல்வதால், பொதுமக்கள் இவ்வீதியால் போக்குவரத்துச் செய்வதற்கு அச்சமடைந்துள்ளதுடன், சுற்றாடலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென, மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின், கோரிக்கைக்கமைய இவ்வீதியால் செல்லும் கனரக வாகனங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக வாகன உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும், அவர் ​மேலும் தெரிவித்தார்.

இவ்வீதியில் தற்போது பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .