2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கண்டி, அம்பாறை வன்முறை தொடர்பில் ஈராக் தூதுவரிடம் ஹரீஸ் விவரிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 மார்ச் 19 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஈராக் நாட்டின் தூதுவர் அஹமட் ஹமீட் அல் ஜுமைல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீசை, விளையாட்டுத்துறை அமைச்சு அலுவலகத்தில் இன்று (19) சந்தித்து, இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான நட்புறவு சம்பந்தமாகக் கலந்துரையாடினார்.

இதன்போது, கண்டி மற்றும் அம்பாறை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பிரதியமைச்சர் ஹரீஸ், ஈராக் தூதுவருக்கு விவரித்துக் கூறினார்.

குறித்த சம்பவங்களின்போது, பள்ளிவாசல்கள், வீடுகள், வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டமை, அவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை என்பன தொடர்பிலும் அவர் எடுத்துக் கூறினார்.

அத்தோடு, இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர விளையாட்டு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .