2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள்: ‘ஒரு மாதத்துக்குள் தீர்வு’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்பதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன வாக்குறுதியளித்துள்ளார் என, தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு மாத அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாட்டில்,  பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

32 நாள்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம், அமைச்சரவை தீர்மானம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கமைய வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுடிருந்ததாகவும், தெரிவித்தார்.

இது தொடர்பாக, உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் அனைத்துப் பல்கலைக்கழகத் தொழிச்சங்க சம்மேளனப் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைடுத்து, சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளுக்கும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படுமென, அமைச்சர் பந்துல குணவர்த்தன வாக்குறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .