2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனையில் மீண்டும் சர்வோதய நிலையம் திறக்கப்பட வேண்டும்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்நாட்டிலுள்ள அடிமட்ட மக்களின் காலடிக்குச் சென்று, பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகின்ற சர்வோதைய அமைப்பின் பிராந்திய நிலையத்தை, மீண்டும் கல்முனையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சர்வோதைய அமைப்பின் தலைவர் டொக்டர் வின்னியா ஆரியரட்ண, உப தலைவர் வேல்முருகு ஜீவராஜ் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடித்தில், "கல்முனை வாடி வீட்டு வீதியில், பல வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கி வந்த கல்முனைப் பிராந்தியத்திற்கான சர்வோதைய நிலையம், ஒரு சில காரணங்களால் சில வருடங்களுக்கு முன்னர் அம்பாறை நகருக்கு மாற்றப்பட்டது. இதனால் கல்முனைப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறுபட்ட உதவிகளை இழந்துள்ளனர்.

“மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு, வீடமைப்பு உதவிகள், மலசலகூட வசதிகள், குடிநீர்க் கிணறுகள், வாழ்வாதார உதவிகள், வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு பணிகள் என்பவற்றை, சர்வோதயம் மேற்கொண்டமை வரலாற்றுப் பதிவாகும்.

“இவற்றுக்கு மேலாக, இந்நாட்டில் நிரந்தர சமாதானம், சுபீட்சம், சமூகங்களுக்கிடையிலான உறவுப்பாலம், கலாசார மேம்பாடு என உயரிய பணிகளை முன்னெடுக்கின்ற சர்வோதய நிலையத்தை, மீண்டும் கல்முனையில் திறக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .