2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிராமம் தோறும் தகவல்களைப் பெறும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற புலம்பெயர் தொழிலாளர்களது பிரச்சினைகளை கண்டறிந்து, பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், கிராமம் தோறும் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'ஸ்ரமிக்க சுரெக்கும' நடமாடும் சேவை, அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இன்று (21) நடைபெற்றது.

இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சா் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்,

“நிலையான நாடு என்ற நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் இவ்வேலைத்திட்டம்  மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“இலங்கையிலிருந்து சுமார்17 இலட்சம் போ், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ள போதிலும் அவா்கள் தொடா்பான போதிய தகவல்கள், அவா்களது தொழில் உறுதிப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள்,  தொழில் புரிந்துவரும் நாட்டில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடா்பில் போதிய தகவல்கள் இல்லாமலுள்ளன.

“புலம்பெயா் தொழிலாளர்கள், எமது நாட்டின் முக்கிய வளமாகக் காணப்படுகின்றனா். இவா்களது உழைப்பின் மூலம் நாடு பெருமளவிலான அன்நிய செலாவணியை  வருமானமாகப் பெற்று வருகின்றது.

“இவா்களது  பாதுகாப்பை உறுதி செய்வதும் இவா்களது சேவையையும், உழைப்பையும் சட்டத்துக்குட்பட்ட முறையில் மாற்றியமைத்து அவா்களது குடும்பத்தினருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக அமைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிக்கு அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகங்களிலும், பிற்பகல் 12 மணியளவில் காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்களிலும், இறுதி நாளான 28ஆம் திகதி காலை 9 மணிக்கு கல்முனை முஸ்லிம், தமிழ் பிரதேச செயலகங்கிளலும், பிற்பகல் 12 மணிக்கு நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகங்களிலும், இந்த  நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .