2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேசப் போட்டியில் அக்கரைப்பற்று மாணவர்கள்

Editorial   / 2018 மே 23 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று, முனவ்வறா கனிஷ்ட கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள், சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச கணித வினா - விடைப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

தேசிய மட்டத்தில் நடைபெற்ற சர்வதேச கணித வினா - விடைப் போட்டியில், இக்கல்லூரியில் தரம் 6இல் கல்வி கற்கும் எச்.அஹ்னப் அப்துல்லாஹ், தரம் 9இல் கல்வி கற்கும் என்.அத்திப் அப்லா ஆகிய இரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு, ஜூலை மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், அக்கரைப்பற்று வலய மட்டத்தில் நடைபெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தரம் 06இல் கல்வி கற்கும் ஆறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, விஞ்ஞான ஒலிம்பியாட் மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .