2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கைநெறியைப் பூர்த்திசெய்த மாணவா்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக, விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம கலந்துகொள்ளவுள்ளாரென, கல்லூரியின் அதிபர் எஸ்.தியாகராசா தெரிவித்தார்.

இவ்விழா, எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை, அதாஉல்லா அரங்கில் நடைபெறவுள்ளதுடன், பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த 546 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இவ்விழாவில், அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, அமைச்சின் செயலாளர் சந்தியா விஜயபண்டார, தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.என்.கே.மலலசேகர, அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

2014ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையிலான தேசிய தொழில் தகைமை கற்கைநெறியை (NVQ) பூர்த்திசெய்த மாணவர்களுக்கு, முதன்முறையாக இத்தொழில்நுட்பக் கல்லூரியில் 292 தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், 2016இல் கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்து சித்தியடைந்த 254 மாணவர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களத்தின் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள உறுதிப்படுத்தத் தவறிய மாணவர்கள், தங்கள் பெயர்களை முற்கூட்டியே தொழில் வழிகாட்டல் பிரிவில் பதிவுசெய்து கொள்ளுமாறு, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எஸ்.தியாகராசா கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .