2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகாதார விதிகளைப் பின்பற்றாத உணவகங்களை மூட நடவடிக்கை

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.ஹனீபா

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் போன்றவற்றை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தெரிவித்தார்.

தற்போது நோன்பு காலம் ஆகையால் வீதி ஓரங்களில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு சுகாதார  நடைமுறைகள் பின்பற்றப்பட வில்லையென அறியக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம், கையுறை போன்றவற்றை பாவிக்கவேண்டு மென கேட்டுள்ளார்.

பொத்துவில்,அக்கரைப்பற்று, சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய நகர் பிரதேசங்களிலுள்ள உணவு கையாளும் நிலையங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாதவும், இதன் போது உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள், உணவு பரிமாறுவோர் ஆகியோருக்கு சுகாதாரம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருவதாகவும்  கூறினார்.

உணவு பாதுகாப்புசட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கண்டுபிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நிலையங்கள் மூடப்படுமெனவும்  மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .