2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டின் மீன், பருப்பின் விலைக்குறைப்பு மக்களை எட்டவில்லை

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, வி.சுகிர்தகுமார்

நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் விலைகுறைப்புச் செய்யப்பட்ட டின் மீன், பருப்பு ஆகியவற்றின் புதிய விலையில் இன்னும் மக்களைச் சென்றடையவில்லையென, புகார் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனைப் பிராந்தியத்தில் பெரும்பாலான கடைகளில் குறித்த உணவுப் பொருள்கள் பழைய விலையிலேயே விற்கப்படுவதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடை உரிமையாளர்களிடம் இது குறித்துக் கேட்டபோது இன்னும் புதிய விலைக்கு விற்கவேண்டிய அப்பொருள்கள் தமக்கு வந்துசேரவில்லை எனக்கூறினார்.

அதேவேளை, சதொச விற்பனை நிலையம் சிலவற்றுக்கு நேற்று முன்தினம் வந்த டின் மீன், பருப்பும் வந்து ஒருசில நிமிடங்களுள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

பிரதேச செயலக அதிகாரிகளிடம் அது குறித்து வினவிய போது, குறித்த பொருள்களுக்குத் தட்டுப்பாடிருக்குமாயின் அவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.

இம்மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு கிலோகிராம் பருப்பு 65 ரூபாய்க்கும், டின் மீன் 100 ரூபாய்க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .