2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில்  விசேட டெங்கு ஒழிப்பு  வேலைத்திட்டமொன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டதாக, சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி எம்.எம். எம். சாபீர் தெரிவித்தார்.

 

இந்த  வேலைத்திட்டத்தினை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட  07 உயர் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள்  ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தது. இதன் ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கலந்து கொண்டார்

அதனைத் தொடர்ந்து,  டெங்கு விழிப்புணர்வு நடைபவனி ஹிஜ்ரா சந்தியில் இருந்து பிரதான வீதிவழியாக இடம்பெற்றதுடன், புகை விசிறும் நடவடிக்கைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று டெங்கு சிரமதான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிரமதான வேலைத்திட்டத்தின் போது,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.கே. இப்னு அசார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சுமார் 02 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .