2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தைப்பொங்கலில் ஒன்றுகூடாதீர்!

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளைத் தவிர்ப்பதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

தைப்பொங்கல், நாளை மறுதினம் (14) கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கோவில்களில் உள்ளேயோ, ஏனைய இடங்களிலோ மக்கள் ஒன்றுகூடுதல் மற்றும் சன நெரிசல் ஏற்படக்கூடியவாறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாமென அவர் கேட்டுள்ளார்.

மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல், கைகளைச் சுத்தம் செய்தல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டுதல் கட்டாயமெனவும் அவர் வலியுறுத்தினார். 

மேலும், தைப்பொங்கல் தினத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும், அவர் அறிவுறுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .