2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நோய்களை அறிந்து சிகிச்சை செய்யுங்கள்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜூலை 20 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாய செய்கையில் நோய்களை அறிந்து சிகிச்சை செய்யும்போதே நோய்களைக் கட்டுப்படுத்த முடிவதுடன், விவாசயத்துறையில் இலாபத்தையும் அடைய முடியுமென, நிலையப் பொறுப்பு விவசாய போதனாசிரியர் ஏ.எச்.ஏ. முபாறக் தெரிவித்தார்.

“நிரந்தர பயிர்ச்செய்கைத் திட்டம்” எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை விவாசய விரிவாக்கல் நிலையம் ஏற்பாடு செய்த விழப்புணர்வு ஊர்வலமும், கருத்தரங்கும், அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் நேற்று (19) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய போதானாசிரியர் முபாறக் மேலும் தெரிவிக்கையில்,

“அம்பாறை மாவட்டத்தில் பிரதான தொழில் துறையாக நெற்செய்கையே முக்கியத்துவம் பெற்றுவருகின்றது. இவ்விசாய செய்கையின் போது நெற்பயிருக்கு ஏற்படும் நோய்கள், அதனைக் கட்டுப்டுத்தும் முறைகள் தொடர்பில் விவசாயிகள் உரிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமை பாரிய குறைபாடாகவே இருந்து வருகின்றது.

“விவசாயிகளின் இவ்வாறான செய்றபாடுகளினால் நெற்பயிருக்கு ஏற்படும் நோயை உhழிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியாது போவதுடன் அதிக செலவீனங்களுக்கும், நட்டங்களுக்கும் அளாகிவருகின்றனர்.

“அதிகமாக நெற்பயிருக்கு கபிலநிறத்துக்கிளி, பக்ரீரியா இலை வெளிறள், சந்து குத்தி, மஞ்சள் நிறமடைதல் போன்ற நோய்கள் அதிகம் ஏற்பட்டு வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும், விவசாயச் செய்கையில் ஏற்படும் பிரச்சினைகளையும்  விவசாய போதானாசிரியர்களிடம் சென்று அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

“விவசாயிகள் சிபார்சு செய்யப்பட்டளவான நெதரசனை பாவித்தல், மழையின் போது வயல்களில் தற்காலிக வெள்ளம் ஏற்படுவதை தவிர்த்தல், எதிர்ப்பின வர்க்கங்களை செய்கை பண்ணல், வயற் சுகாதாரம் பேணல், சேதம் ஏற்படும் முன்பு எதிர்ப்பு தன்மையதை; தூண்டும் இரசாயணம் பாவித்தல் போன்ற நடைமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதன் மூலம் சிறந்த பயனை அடைந்து கொள்ள முடியும்” என்றார்

இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், விவசாயப் போதானாசிரியர்கள், விவசாய உத்தியோகதர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .