2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பாடசாலை மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படாது என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
 
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென வெளியாகியுள்ள தகவலில் எந்தவிதமானஉண்மையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்தியத்துக்கு உட்பட்ட எந்தவொரு பாடசாலையிலும் மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாதெனவும், அவ்வாறு பரிசோதனைகளை பாடசாலைகளில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லையெனவும், அதற்கான அவசியம் ஏற்படவில்லை எனவும் கூறினார்.

கல்முனை பிராந்தியத்துக்குட்பட்ட எந்தவொரு பாடசாலை மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ இவ்வாறான வதந்திகள்  குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .