2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளுக்கு தொற்று நீக்கி தெளிகருவிகள் கையளிப்பு

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு முன்ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதற்கு ஆதரவாக பல்வேறு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதுடன் உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இதற்கமைவாக, தொற்று நீக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன், பாடசாலைக்கான தொற்று நீக்கி தெளிகருவிகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கு முன்னுதாரணமாக, பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் சுவாட் என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பானது பாடசாலைகளில் கொவிட் 19 வைரஸ் பரவாமல் பாதுகாக்கும் வகையில், பாடசாலைகளுக்கான தெளிகருவிகளை பெற்றுக்கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

சுவிஸ் டெவலப்மன்ட கோப்பரேசன் பண்ட் நிதியீட்டதுடன் கொள்வனவு செய்யப்பட்ட நான்கு தெளிகருவிகளை பாடசாலையின் அதிபர்கள், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று (24) நடைபெற்ற நிகழ்வில், சுவாட் அமைப்பின் தலைவர் வி.பரமசிங்கம் சுவாட் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் க.பிறேமலதன் உள்ளிட்ட பாடசாலையின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயம், கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கும் தொற்று நீக்கி தெளிகருவிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .