2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, இறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ் வீதியின் அபிவிருத்தி பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (13) பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், விளையாட்டுதுறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த இறக்காமம் குளத்தாவளி சந்தி தொடக்கம் வரிப்பத்தான் சந்தி வரையிலான வீதியை காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அமைச்சினால் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .