2024 மே 08, புதன்கிழமை

மருதமுனையில் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கத் திட்டம்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஊடாக, இரண்டாயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக உலருணவுப் பொதிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, நாளாந்தம் தொழில்செய்யும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தை, மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமாசபை, பொது அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.

பல்வேறு தாப்பினர் ஊடாகவும் சேகரிக்கப்பட்ட நிதிகள், பொருள்கள், தற்போது அனர்த்த மத்திய நிலையமாக செயற்படும் மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கான உலருணவுப் பொதிகள், விரைவில்  பிரதேச செயலகம், பொலிஸார்,   இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு  வழங்கி வைக்கப்படவுள்ளன என்று, அனர்த்த மத்திய நிலையத்தின் செயலாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X