2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ரோட்டு போட்டால் ஓட்டு’

Editorial   / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை, மக்பூலியா வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த வீதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை அபிவிருத்தி செய்து தருமாறு, பொதுமக்கள் பல வருட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

எனினும், இதுவரை இந்த வீதி அபிவிருத்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில், தற்போது கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் மருதமுனை மண்ணில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது.

இதனையடுத்து, மருதமுனை மக்பூலியா  வீதியில் நேற்று (27) ஒன்று திரண்ட பொதுமக்கள், “ரோட்டுப் போட இயலாதவர்கள் வோட்டுக் கேட்டு வரவேண்டாம்”  என்று கோசம் எடுப்பினர்.

“இந்த வீதியை யார் விரைவாக அபிவிருத்தி செய்து தருகிறார்களோ, அவா்களுக்கு கட்சி பேதம் பாராமல் வாக்களிப்போம். அபிவிருத்தி செய்து தருவதற்கு  யாரும்  முன்வராவிட்டால் தேர்தலை பகிஸ்கரித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவோம்” எனவும் பொதுமக்கள் தமது ஆதங்கங்களை  வெளிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .