2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆன்மீக இரகசியங்கள் அறிவோம்!

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரமாக ஓடிகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் கோவிலுக்குச் செல்ல கூட நேரம் ஒதுக்காமல் பார்த்த இடத்தில் கடவுளை வணங்கி விட்டு செல்கிறோம். ஆனால், கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். நம்மில் பெரும்பாலானோருக்கு எப்படி வழிபட வேண்டும் என்பது தெரியாது. அதை நாம் பின்பற்ற கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அதை பற்றிய சில ஆன்மீக தகவல்கள் இங்கே...

திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

அர்ச்சனைப் பொருள்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.

எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.

இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்துக்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுச் செல்ல வேண்டும்.

கோவில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.

குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .