2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

3 கோடி பேருக்கு 3 மாத ஓய்வூதியம்

Editorial   / 2020 மார்ச் 27 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

கொவிட்-19 வைரஸைத் தடுக்கும் வகையில் 21 நாள்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், அதனால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினையைச் சமாளிக்கும் பொருட்டு முதியோர்,

மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு 3 மாத ஓய்வூதியத்தை  மொத்தமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஓய்வூதியம் ஏப்ரல் முதல் வாரத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில் கிடைக்கப்பெறும்.

இதன் மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 740க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாள்கள் ஊரடங்கிற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

21 நாள்கள் ஊரடங்கினால் ஏரளமான தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

21 நாள்களுக்குப் பின் பொருளாதாரத்தில் பெரும் சுணக்கம் வருவதை அறிந்த மத்திய அரசு ஏற்கெனவே ரூ.1.70 லட்சம் கோடிக்கான நிதித் தொகுப்பை நேற்று வெளியிட்டது.

ரிசர்வ் வங்கியும் வட்டிக் குறைப்பு, வங்கிகளில் கடன் தவணை செலுத்துவதில் 3 மாதம் விலக்கு உள்ளிட்டவற்றை அறிவித்தது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .