2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

8 பொலிஸாரை சுட்டுக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரை சுட்டுக் கொன்ற பொலிஸார்

Editorial   / 2020 ஜூலை 10 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் எட்டுப் பொலிஸாரை சுட்டுக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் விகாஸ் டுபேயை சுட்டுக் கொன்றதாக இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் ஏறத்தாழ ஒரு வாரமாக ஓடிய விகாஸ் டுபே, உத்தரப் பிரதேசத்தின் அயல் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் நேற்று  கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், விகாஸ் டுபே பயணித்த காரானது குடைசாய்ந்தபோது அவரை உத்தரப் பிரதேசத்துக்கு கொண்டு சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கியை திருடிய விகாஸ் டுபே, ஓடியதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, விகாஸ் டுபே சரணடைய மறுத்து பொலிஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில், பொலிஸார் பதில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி மோஹிட் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் மிகவும் மோசமான குற்றவாளிகளிலொருவராக வர்ணிக்கப்படும் விகாஸ் டுபே, கொலை, கொலை முயற்சி, கடத்தல், தீ வைப்பு, கலகம் உள்ளடங்கலாக 60க்கும் மேற்பட்ட வழக்குகளை தனக்கு எதிராகக் கொண்டுள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு பொலிஸ் நிலையமொன்றுக்குள் மாநில அமைச்சரரொருவரை விகாஸ் டுபே கொன்றதாகக் கூறப்பட்டுகிறது. விகாஸ் டுபே கைதுசெய்யப்பட்டபோதும் விரைவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நல்ல அரசியல் தொடர்புகளை விகாஸ் டுபே கொண்டிருந்ததகாக் கூறப்படுவதுடன், அவர் செல்லுமிடமெல்லாம் ஒரு குழு ஆயுதந்தரித்த நபர்கள் அவருடன் சென்றுள்ளனர். விகாஸ் டுபேக்கெதிராக வாக்குமூலங்களை சாட்சிகள் அடிக்கடி மாற்றுவதுடன் அல்லது நீதிமன்றத்தில் சமூகமளிக்க மறுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .