2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருமாவளவனுக்கு எதிராக போராட்டிய குஷ்பு கைது

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார்.

அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார்.

மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு

பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க. அறிவித்திரு ந்தது.

ஆனால், சிதம்பரத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவதற்காக சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அவரை முட்டுக்காடு அருகே வழிமறித்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அதேபோல, போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த பா.ஜ.கவின்

மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவனை ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறை கைதுசெய்துள்ளது.

"பெண்களின் கண்ணியத்திற்காக இறுதிவரை போராடுவோம். பிரதமர் நரேந்திர மோதி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் பேசுவார். நாங்கள் அவர்

பாதையில் செல்கிறோம். சில சக்திகளின் அராஜகங்களுக்கு அடிபணிய மாட்டோம்" என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் "வி.சி.க. கோழைகள். மகிழ்ச்சியடையாதீர்கள். இது உங்கள் தோல்வி.

நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சக்தி என்பதால்தான் கைதுசெய்யப்பட்டுள்ளோம். நாங்கள் அடிபணிய மாட்டோம்" என்று கூறியிருக்கிறார்.

 

தங்களை கைதுசெய்திருப்பது அரசின் கையாலாகா த்தனம் என கே.டி. ராகவன் கூறியிருக்கிறார். "இந்து மதத்தை இழிவு படுத்திய திருமாவளவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய சிதம்பரம் செல்லும் குஷ்பூ அவர்களையும், என்னையும் கைது செய்திருப்பது அரசின் கைலாகாத்தனத்தை காட்டுகிறது." என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .