2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் இன்றுடன் நிறைவு?

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் புதன்கிழமையுடன் (செப். 23) நிறைவு செய்யப்பட்டு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை மேலும் கூறுகையில், ‘சில அமைச்சா்கள் உட்பட எம்.பி.க்களிடையே கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் 5 மசோதாக்களைப் பரிசீலித்த பிறகு திகதி  குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேபோல், மக்களவை நடவடிக்கைகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தொடங்கி நிறைவடைந்த பிறகு சுமார் 5 மணியளவில் அவை திகதி  குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.   

மக்களவைக் கூட்டத்தை முன்கூட்டியே நிறைவு செய்வது தொடா்பான முடிவு, அவையில் உள்ள உறுப்பினா்கள் சார்ந்த கட்சிளின் தலைவா்களுக்கும் தெரிவிக்கப்பட்டது’ என்றன.

முன்னதாக, மக்களவைத் தலைவா் தலைமையில் சமீபத்தில் அனைத்து கட்சிகளின் அவைத் தலைவா்கள் பங்கேற்ற அவை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

அதில், கொரோனா சூழல் காரணமாக பெரும்பாலான கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளனா்.

18 நாள்களுக்கு கூட்டத்தை நடத்துவது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சில எதிர்க்கட்சித் தலைவா்கள் மத்திய அரசிடம் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்தே கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு யோசித்து வந்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி நடந்துகொண்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத்  தெரிவித்து  எதிர்க்கட்சிகள் பல இரு அவை நடவடிக்கைகளையும் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தன.

இத்தகைய சூழலில் மக்களவை கூட்டம் முன்கூட்டியே நிறைவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

முன்னதாக, கடந்த 14ஆம் திகதி தொடங்கிய கூட்டத்தொடா் அக்டோபா் 1-ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு கூட்டத்தொடரில் அவசரச் சட்டங்களுக்கு பதிலாக கொண்டுவரப்பட்டவை உட்பட பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .