2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காற்று மாசுவைத் தடுக்க புதிய சட்டம்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தில்லி

 தில்லி காற்று மாசுவைத் தடுக்கவும், அருகே உள்ள மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்கவும் மத்திய அரசு புதிய சட்டத்தை உருவாக்கி வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

இதையடுத்து, பயிர்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர் தலைமையில் அமைக்கப் பட்ட ஒருநபர் குழு உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ எஸ் போப்டே தலைமையிலான அமர்வு முன்

இணையவழி மூலம் திங்கள்கிழமை ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, ‘காற்று மாசு பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காண மத்திய அரசு

ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுத்துவருகிறது. இதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இந்த வரைவு மசோதா நான்கு நாள்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .