2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில், 15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டம் மற்றும் வரும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் நேற்றுக்காலை 10 மணிக்கு தொடங்கியது.

அப்போது, புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையைத் தொடங்கினார்.

உடனேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று பேசினார்.

அப்போது, ஆளுநர், "என்னை பேச அனுமதிக்க வேண்டும். நான் புதியவர் அல்ல. இரண்டு ஆண்டு காலமாக இங்கு இருக்கிறேன்.

எனக்கு எல்லாம் தெரியும். நீங்கள் நல்ல பேச்சாளர். நீங்கள் பிறகு விவாதிக்கலாம்" என ஸ்டாலினை நோக்கி கூறினார்.

இதையடுத்து, ஆளுநர் உரையைப் புறக்கணித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில், மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ஆளுநர் உரையை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

தமிழகத்தின் கடன் தொகை 4 இலட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி, இதே ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.

இந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது.

அதிமுக ஆதரவால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால், சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப் பட்டிருக்கிறது என்றும் பேசினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .