2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எட்டிப்பார்த்த பாட்டிக்கு ஏற்பட்ட கதியை பாருங்களேன்

Editorial   / 2021 மே 03 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில இடங்களில் கண், காதுகளை மூடிக்கொண்டு, வாயைத் திறக்காமல் இருந்தாலே பலருக்கு பிரச்சினைகளே வராது. நல்லவற்றை விடவும் கெட்டவையே பலரது கண்களுக்குப்  பட்டெனத் தெரியும்.

சரி விடயத்துக்கு வருவோம்…

தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, 94 வயதான மூதாட்டியொருவர் தனியாக வசித்துவந்துள்ளார். அப்படியிருந்தும் தங்க நகைகளை அள்ளிப் போட்டுக்கொண்டு, ஜொலித்துகொண்டுதான் மூதாட்டி வலம் வருவார்.

அவருக்கென தென்னந்தோப்பும் இருந்துள்ளது. அவ்வப்போது, தோப்புக்குச் சென்று மேற்​பார்வை செய்தும் வருவார்.

அந்த தென்னந்தோப்பில், சிலர் வேலைச்செய்கின்றனர். மோட்டார் பம்பி இயந்திரங்க​ளுக்கு தனியான அறையொன்றும் உள்ளது.

காளி முத்தமாள் என்றழைக்கப்படும் அந்த மூதாட்டி, இரண்டு வாரங்களுக்கு முன்னர், தென்னந்தோப்பில் வலம்வந்துள்ளார். மோட்டார் பம்பியைப் பார்த்துவிட்டுச்  செல்லும் போது அவ்வறைக்கு அருகில் முணுமுணுக்கும் சத்தம் கேட்டுள்ளது.

மோட்டார் வேலைச்செய்யாமையால், முணுமுணுக்கும் சத்தம் மூதாட்டியின் காதுகளுக்குத்  தெளிவாக கேட்டுள்ளது. எனினும், காதுகளை கூர்மையாக்கிய அந்த மூத்தாட்டி, சத்ததை உறுதிப்படுத்திக்கொண்டார்.

ஆக, தென்னந்தோட்டத்தில் வேலைபார்க்கும் முத்துராக்கு எனும் பெண் அதே பகுதியை சேர்ந்த வடிவேலும் மோட்டார் அறைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 கதவைத் திறக்காத மூதாட்டி, எட்டிப்பார்த்துள்ளார். இருவரும் இருந்த அலங்கோலத்தை கண்டுள்ளார். மூதாட்டி பார்த்ததை, ஜோடியும் கண்டுகொண்டது.

ஆங்காங்கே நழுவியிருந்த ஆடைகளை சரிசெய்துகொண்டு, அப்பெண் வேலைக்குத் திரும்பிவிட்டார். அவரது காதலன், தப்பியோடிவிட்டார்.

இதனையடுத்து முத்துராக்குவை வேலையிலிருந்து மூதாட்டி நீக்கிவிட்டார். விரக்கித்தியடைந்த அப்பெண், மூதாட்டியை படுகொலைச் செய்து, நகைகளை அபகரிப்பதற்கு திட்டம் தீட்டினார். தனது காதலன் வடிவேலுடன் இணைந்து, மூதாட்டியை தீர்த்துக்கட்டி, நகைகளை அபகரித்துள்ளனர்.

அங்கத்திலிருந்த அதனை நகைகளை கைப்பற்றினாலும், மூதாட்டியின் காதிலிருந்த கம்மலை மட்டும் கழற்றமுடியவில்லை. காதல் கண்களை மறைத்திருந்தமையால், காதோடு அறுத்துச் சென்றுவிட்டனர்.

இச் சம்பவமானது பொலிஸாருக்கு தெரியவரவே காதல் ஜோடியைக் கைது செய்த பொலிஸார் அவர்களிடமிருந்து  அத்தனை நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

தனிமையில் வசிக்கின்ற பெண்கள் பிறர் கண்ணை  உருத்தும் அளவுக்கு  நகைகளை அணிவது மட்டுமன்றி ஆடைகளை அணிவரும் அவர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதற்கு இக் கொலை மற்றும் கொள்ளை சம்பவமே சான்று.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .