2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்’

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 29 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

இந்தியாவிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்ட 'தேவி அன்னபூர்ணா சிலை' மீட்கப்பட்டது பற்றி  ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி , அகில இந்திய வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்திய கலாசாரம் மற்றும் புனித நூல்கள் ஆனது உலகம் முழுமைக்கும் ஓர் ஈர்ப்பு மையம் ஆக திகழ்கிறது. சிலர், இந்தியாவுக்கு தங்களைத் தேடி வருகின்றனர்.  வாழ்வை தேடி இங்கேயே தங்குகி ன்றனர்.

ஒரு சிலர் இந்திய கலாசார தூதர்களாக தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர்.  ஜோனாஸ் மாசெட்டி என்ற விஸ்வநாத் என்பவரின் பணி பற்றி எனக்கு தெரிய வந்தது.

அவர் பிரேசில் நாட்டில் வேதாந்தம் மற்றும் கீதை பற்றிய பாடங்களை எடுத்து வருகிறார்.  விஷ்வவித்யா என்ற அமைப்பு ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். 

ரியோ டி ஜெனீரோ நகரில் இருந்து ஒரு மணிநேர வாகன பயணத்தில் அடையும் பெட்ரோபோலிஸ் நகரின் மலைக் குன்றில் அது அமைந்துள்ளது.ஜோனாஸ், இயந்திர பொறியியல் படிப்பு முடித்த பின்னர் தனது பங்கு சந்தை நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். 

இதன்பின்னர் அவருக்கு இந்திய கலாசாரம் மீது குறிப்பிடும் படியாக வேதாந்தம் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது.என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .