2024 மே 08, புதன்கிழமை

கொவிட்-19 தொற்றுக்கள் அதிகரிக்கையில் படுக்கைகளை விட அதிக நோயாளர்கள்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில்இன்று காலை எட்டு மணி வரையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 6,977-ஆல் அதிகரித்து 138,845ஆகக் காணப்படுவதோடு, கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 154-ஆல் உயர்ந்து 4,021ஆகக் காணப்படுகின்ற நிலையில், மும்பையிலேயே ஐந்திலொரு பங்குக்கும் அதிகமான கொவிட்-19 தொற்றுக்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில், இந்தியாவின் நிதியியல் மய்யமும், அதன் மிகவும் சனத்தொகை மிக்க நகரான மும்பையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு படுக்கைகளை கண்டுபிடிக்க திண்டாடுகின்றனர்.

இந்தியாவின் 1.3 பில்லியன் பேரைக் கொண்ட சனத்தொகையில், இவ்வாண்டு ஜூலை மாத ஆரம்பத்தில் 630,000 தொடக்கம் 2.1 மில்லியன் வரையானோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாவார்கள் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் தரவுகள் மற்றும் தொற்றுநோயியல் விரிவுரையாளரொருவரான பஹ்ரமர் முகர்ஜியின் அணி எதிர்வுகூறியுள்ளது.

இந்நிலையில், தொற்றுக்குள்ளானோரின் அதிகரிப்பு எதிர்பார்ப்பு குறித்து எவ்வாறு எதிர்கொள்வீரர்கள் என்ற கேள்விக்கு இந்திய சுகாதாரமைச்சு பதிலளித்திருக்கவில்லை.

இந்திய மத்திய அரசாங்கத்தின்படி தகவல்படி இந்தியாவில் 714,000 வைத்தியசாலை படுக்கைகள் காணப்படுகின்ற நிலையில், பிந்தைய தரவுகளின்படி 1,000 பேருக்கு 0.5 படுக்கையையே இந்தியா கொண்டிருக்கிறது.

இந்நிலையில், குறைந்தது 100 தனியார் வைத்தியசாலை படுக்கைகளை 24 வலயங்களிலும் கட்டுப்பாட்டில் எடுக்குமாறு 20 மில்லியன் பேரைக் கொண்ட மும்பை மாநகர அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X