2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கேரளாவில் 2ஆவது உயிரிழப்பு: ஒரு இலட்சம் பேர் கண்காணிப்பு

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரம்

கொவிட்-19 வைரஸுக்கு கேரள மாநிலத்தில் இன்று 2ஆவது உயிரிழப்பு ஏற்பட்டது. கொவிட்-19இனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முன்னாள் பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் புத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த 68 வயதான அப்துல் அஜீஸுக்கு கொவிட்-19  வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர் இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை என்றபோதிலும் இவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்து.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் அஜிஸ் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புத்தன்கோடு கவுன்சிலர் பாலமுரளி கூறுகையில், “அப்துல் அஜிஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 18ஆம் திகதி  முதல் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், 23ஆம் திகதி திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அப்துல் அஜிஸ் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனயில் அப்துல் அஜிஸுக்கு நெகட்டிவாக முடிவு வந்தது.

ஆனால் 2-வது முறையாக எடுக்கப்பட்ட முடிவில் அவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5 நாள்களாக செயற்கை சுவாசம் தரப்பட்ட நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .