2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பறவை கூட்டை முக கவசமாக அணிந்து வந்த முதியவர்

Editorial   / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதியவர் ஒருவர்  பறவை கூட்டை முக கவசமாக  அணிந்து ஓய்வூதிய தொகை வாங்க வந்தார்.அந்த முதியவரை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர். தெலுங்கானாவில் அடிக்கடி முக கவசம்  வாங்க முடியாததால் பறவை கூட்டை முகக் கவசமாக அணிந்துவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

 இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி தூய்மையாக இருப்பதும் தான் கொரோனா தொற்றை குறைப்பதற்கான வழி என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் முக கவசம் வாங்க  முடியமால் தவித்து வருகின்றனர். அப்படியாக முகக்கவசம் வாங்க முடியாமல் தனக்கான ஒரு கவசத்தை பறவை கூட்டில் இருந்து செய்து அணிந்து வந்த முதியவரின் செயல் ஒன்று தெலுங்கானாவில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மக்புப் நகர் எனும் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல் சாட் பகுதியை சேர்ந்த மேகலா குர்மய்யா எனும் முதியவர் தனது ஓய்வூதிய தொகையை வாங்க சென்றுள்ளார் .அப்போது அவர் துணியாலான முக கவசத்திற்கு பதிலாக பறவைக்கூட்டத்தினால் ஆன முக கவசத்தை அணிந்து சென்றுள்ளார்.இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .