2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜுன பணியாற்றவில்லை!

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி இருந்ததில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இது முற்றிலும் தவறான தகவல். அதுபோன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .