2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹரியாணாவில் நிலநடுக்கம்; டெல்லியில் நிலஅதிர்வு

A.K.M. Ramzy   / 2020 மே 30 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஹரியாணாவில் ரிக்டர் அளவில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது.

ஹரியாணா மாநிலம் ரோஹ்தக் பகுதியில் கடந்த இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து சில முறை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்தனர்.

உடனடியாக வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இரவு நெடுநேரமாகியும் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் வெளியிலேயே இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் வெளியானதும் சமூகவலைதளங்களில் மக்கள் இதுதொடர்பான தகவல்களை பதிவிட்டனர். இதனால் மக்களிடம் பீதி ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .